ஐக்கிய தேசியக் கட்சி மறுசீரமைப்பு குழு இன்று மாலை கூடுகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு குழு இன்று மாலை கூடவுள்ளதாக அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

குறித்த குழுவின் 12 உறுப்பினர்கள் இரகசிய வாக்கடெுப்பு மூலம் கடந்த 08ஆம் திகதி தெரிவுசெய்யப்பட்ட நிலையில், இன்று முதன்முதலாக கூடுகின்றது.

அலரி மாளிகையில் இந்தக் கூட்டம் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகிலவிராஜ் காரியவசம், மங்கள சமரவீர, கயந்த கருணதிலக்க, நவீன் திஸாநாயக்க, ரஞ்சித் மததும பண்டார, ஹரின் பெர்னாண்டோ, ருவன் விஜேவர்தன, இரான் விக்கிரமரத்ன, அஜித் பி பெரேரா, ஜே.சி.அளவத்துவல, நலீன் பண்டார மற்றும் அசோக பிரியந்த ஆகியோர் குறித்த குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]