ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை பதவியேற்பு?

தேசிய அரசாங்கத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நேற்றிரவு விலகியுள்ள நிலையில், நாளை மறுநாள், ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை பதவியேற்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நேற்று மாலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், சபாநாயகர் கரு ஜெயசூரியவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நடத்திய பேச்சுக்களின் போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் அமையவுள்ள புதிய அரசாங்கத்தில், தற்போதைய கூட்டு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த அமைச்சர்கள் பலரும் இணைந்து கொள்ளவுள்ளனர்.

அதேவேளை, மேலும் பல ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிரணியில் இணையவுள்ளனர்.

இதுதொடர்பாக, நேற்றிரவு ஐதேக அமைச்சர்களுக்கு ரணில் விக்கிரமசிங்க விளக்கமளித்துள்ளதாக தெரியவருகின்றது.