ஐக்கிய தேசியக் கட்சியை இல்லாதொழிப்பதற்கே ஜனாதிபதி முயற்சிக்கின்றார்- JVP

மத்திய வங்கி முறி மோசடி தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் ஊடாக ஐக்கிய தேசியக் கட்சியை இல்லாதொழிப்பதற்கே ஜனாதிபதி எதிர்பார்த்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி சபைத் தேர்தலை முன்னிட்டு ஹட்டன் திக்ஓயா நகர சபையில் இன்று (06) நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

இம்முறை தேர்தலிலும் மஹிந்த ராஜபக்ஷவுடன் கூடி தேர்தலில் போட்டியிடுபவர்கள், பழைய திருடர்கள் கூட்டமே எனவும் அவர் இதன்போது மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]