ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட கூட்டம் இன்று

ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட செயற்குழு கூட்டம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று இடம்பெறவுள்ளது.

சிறிகொத்தவில் உள்ள கட்சி தலைமைகயத்தில் இன்று காலை 11 மணிக்கு இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளதாக சிரேஷ்ட அமைச்சரொருவர் எமது செய்தி பிரிவுக்கு தெரிவித்துள்ளார்.

குறித்த செயற்குழுவினை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களுக்கு நேற்று மாலை அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது அரசாங்கத்தின் நெருக்கடி நிலைமைகள் உள்ளிட்ட பல விடயங்கள் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]