ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீடும் வேட்பாளர் அறிமுக நிகழ்வும்

ஐக்கிய தேசியக் கட்சி

யாழ்ப்பாணம்; ‘ஐக்கிய தேசியக் கட்சி’ யின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீடும் வேட்பாளர் அறிமுக நிகழ்வும் இன்று சனிக்கிழமை (20) இடம்பெற்றது.

சிறுவர் மகளீர் விவகார அமைச்சரும், ஐக்கிய தேசியக்கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளருமான விஜயகலா மகேஸ்வரன் தலைமையில், யாழ். கந்தர்மடம் பகுதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை (20) காலை 11.00 மணியளவில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில், நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கலந்துகொண்டிருந்ததுடன், ஆதரவாளர்கள் மற்றும் பொது மக்கள் எனப்பலர் கலந்துகொண்டிருந்தனர்.

தேர்தல் விஞ்ஞாபனத்தினை இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், தலைமை வேட்பாளரான விக்னேஸவரனிடம் வழங்கி வெளியிட்டு வைத்ததுடன், ஏனைய வேட்பாளர்களிற்கும் வழங்கி வைத்தார்.

ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆணை வழங்குங்கள், கடந்த இரண்டு வருடத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை முதன்மைப்படுத்தி, இந்த தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சி

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]