ஐக்கிய தேசியக் கட்சிக்கு மீண்டும் ஆதரவு வழங்கியமைக்கான காரணத்தை வெளிட்ட வடிவேல் சுரேஸ்

நான் ஒருபோதும் ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு விலகவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர், வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னிச்சையான முடிவினை மேற்கொண்டு பாராளுமன்றத்தை கலைத்ததனூடாக 225 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஜனநாயக உரிமை பறிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று இடம்பெற்ற ஐக்கிய தேசிய முன்னணியின் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மக்கள் எங்களுக்கு ஐந்து வருட ஆணையை வழங்கியிருந்தார்கள். இந்த ஐந்து வருடகாலப் பகுதியில் வெறுமனே மூன்றரை வருடங்கள் முடிவடைந்துள்ள நிலையில் ஜனாபதி நாடாளுமன்றத்தை தன்னிச்சையாக கலைத்துள்ளார்.

இது நாட்டு மக்களினதும், மக்களால் தெரிவு செய்யப்பட்ட 225 பாராளுமன்ற உறுப்பினர்களினதும் ஜனநாயக உரிமையை பறிக்கும் செயலாகும்.

இந் நிலையில் நாடாளுமன்ற கலைக்கப்பட்டமைக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட வேறு கட்சிகள் தாக்கல் செய்த மனுவுக்கு ஆதரவாக நீதிமன்றம் நேற்றைய தினம் தீர்ப்பு வழங்கியிருந்தது.

ஐக்கிய தேசியக் கட்சி

ஆகவே அந்த நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தலை வணங்குவதுடன், பெருந்தோட்ட மக்களின் உரிமைகளை வெற்றி கொள்வதற்கும் அவர்களின் சம்பள விடயம் சம்பந்தமாகவும், எமது மக்களுக்கான சேவைகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்கும் நான் முழுமையாக ஐக்கிய தேசியக் கட்சியின் கோட்பாடுகளுக்கு கட்டுப்பட்டு செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]