ஐக்கிய இராச்சியத்தின் ஆசிய பசுப்பிக் பிராந்தியத்திற்கான அமைச்சர் மார்க் பீல்ட், வட மாகாண ஆளுநர் சந்திப்பு

வடக்கு மாகாணத்திற்கு வருகைதந்த ஐக்கிய இராச்சியத்தின் ஆசிய பசுப்பிக் பிராந்தியத்திற்கான அமைச்சர் மார்க் பீல்ட் இன்று (06.10.2017) காலை 10 மணியளவில் வட மாகாண ஆளுநர் றெயினோல் குரேயை சந்தித்து கலந்துரையாடினார்.

ஐக்கிய இராச்சியத்தின்

வடக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமைகள், நல்லிணக்கத்திற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆளுநரிடம் பிரிட்டிஸ் தூதுக்குழுவினர் கேட்டறிந்து கொண்டனர்.

வடக்கில் முதலீடுகளை அதிகரிப்பதன் மூலம் வடக்கு இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்க முடியும் எனவும் அதற்கான முயற்சிகளுக்கு பிரிட்டிஸ் அரசு உதவ வேண்டும் என ஆளுநர் கேட்டுக்கொண்டார்.

ஐக்கிய இராச்சியத்தின்

நல்லிணக்கம் உருவாவதற்கு மேலும் ஒரு வசதியாக மூவின மாணவர்களும் கல்வி கற்கின்ற பாடசாலை ஒன்றினை உருவாக்கும் தனது முயற்சியினை அவர்களுக்கு எடுத்து கூறினார். அப்பாடசாலையில் ஆங்கில கற்கையினை ஊக்குவிப்பதற்கு தாம் உதவி புரிவதாக பிரிட்டிஸ் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

ஐக்கிய இராச்சியத்தின்

மேலும் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை தற்போதைய அரசு விடுவித்து வருவதாகவும், படிப்படியாக அதனை விடுவிப்பதற்கான முன்னகர்வுகள் இடம்பெறுவதாகவும், வெகு விரைவில் இந்த வேலைத்திட்டம் நிறைவடையும் என ஆளுநர் பிரிட்டிஸ் தூதுக்குழுவிடம் தெரிவித்தார்.

ஐக்கிய இராச்சியத்தின்

இந்த சந்திப்பில் ஐக்கிய இராச்சியத்தின் ஆசிய பசுப்பிக் பிராந்தியத்திற்கான அமைச்சர் மார்க் பீல்ட்லுடன், இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் ஜேம்ஸ் டோரிஸ், நல்லிணக்கத்திற்கான ஆலோசகர் போல் கிரீன் ஆளுநரின் செயலர் எல்.இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]