ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பொலிஸாரால் உதயங்கவிடம் விசாரணை

ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

டுபாய் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட ரஷ்யாவுக்கான ,லங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிகளால் விடுவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு நேற்று உறுதிப்படுத்தியுள்ளது.

“எனினும், விசாரணைகள் முடியும் வரை, உதயங்க வீரதுங்கவை ஐக்கிய அரபு எமிரேட்சை விட்டு வெளியேற தடைவிதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சும், சட்டம் ஒழுங்கு அமைச்சும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அனைத்துலக பொலிஸாருக்கு வெளியிடப்பட்ட அறிவிப்பின் அடிப்படையிலேயே உதயங்க வீரதுங்க கைது செய்யப்பட்டார். குற்றவியல் விசாரணைக்காக, உதயங்க வீரதுங்கவின் இருப்பிடத்தை தேடிப் பிடிக்கும் நோக்கிலேயே இந்த நீல அறிவிப்பு வெளியிடப்பட்டது.

எனினும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சட்டத்தின்படியும், அனைத்துலக பொலிஸ் விதிமுறைகளின்படியும், உதயங்க வீரதுங்கவை தொடர்ந்து தடுத்து வைக்க முடியாது. இந்தச் சூழலில், அவர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிகளால் விடுவிக்கப்பட்டுள்ளார்.

உதயங்க வீரதுங்க இன்னமும் ஐக்கிய அரபு எமிரேட்சிலேயே தங்கியுள்ளார். இந்த விடயம் தொடர்பாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பொலிஸார் விசாரணை நடத்தி வருகிறனர். இந்த விசாரணைகள் முடியும் வரை அவர் நாட்டை விட்டு வெளியேற தடைவிதிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]