ஐஎஸ் தீவிரவாத அமைப்பு முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவிப்பு

ஐஎஸ் தீவிரவாத அமைப்பு முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவிப்பு

ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு எதிரான போரில் வெற்றி பெற்று விட்டதாகவும், ஐஎஸ் அமைப்பு முடிவுக்கு வந்து விட்டதாகவும் ஈரான் ஜனாதிபதி ஹசன் ருஹானி அறிவித்துள்ளார்.

ஈரான் மற்றும் சிரியா பகுதிகளை கைப்பற்றி தங்களுக்கென்று தனி தேசத்தை உருவாக்கிய ஐஎஸ் தீவிரவாத அமைப்பு, படுகொலை, பெண்கள் சித்ரவதை உட்பட பல கொடூரங்களை அரங்கேற்றி வந்தது.

இவர்களுக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான படைகள், ரஷ்யா மற்றும் ஈரான் இராணுவம் களமிறங்கியது, படிப்படியாக ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தின் பிடியில் இருந்த நகரங்களை மீட்டெடுக்க தொடங்கினர்.

இந்நிலையில் ஐஎஸ் தீவிரவாத இயக்கம் முடிவுக்கு வந்துவிட்டதாக ஈரான் ஜனாதிபதி ஹசன் ருஹானி அரசு தொலைக்காட்சியில் நேரடியாக மக்களுக்கு அறிவித்தார்.

அத்துடன் ஈரான் புரட்சி காவலர்கள் படையின் மேஜர் ஜெனரல் குவசம் சோலிமணியும் இதே அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

கடந்த வாரம் சிரியாவின் கிழக்கு பகுதியில் உள்ள நகரை கைப்பற்றுவதே இறுதி என ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]