ஏ9 வீதியின் நுணாவில் பகுதியில் விபத்து; சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்தனர்

ஏ9 வீதியின் நுணாவில் பகுதியில் விபத்து; சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்தனர்

நுணாவில் பகுதியில்

ஏ9 வீதியின் நுணாவில் பகுதியில் இன்று இரவு 9.15 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிளில் மதுபோதையில் பயணித்த இருவர் பேரூந்துடன் மோதி விபத்தில் அகப்பட்டு இருவரும் உயிரிழந்தனர்.

குறித்த சம்பவத்தில் மீசாலை மத்தியைச் சேர்ந்த – சதீஸ்குமார் வயது 37 மற்றும் – மோகன்ராய் வயது 33 என்பவர்களே இவ்வாறு உயிரிழந்தவர்களாவார்.

குறித்த விபத்து ஏ 9 வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிளும் யாழில் இருந்து கொழும்பு நோக்கிப் யணித்த பேரூந்துடன் இடம்பெற்ற விபத்திலேயே குறித்த இருவரும் உயிரிழந்தனர்.

குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்களும் அதிக மது போதையில் பயணித்த நிலையில் எதிரே வந்த பேரூந்தில் மோதிய நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களை மீட்டு சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டுசென்றிருந்தபோதும் இருவரும் உயிரிழந்திருந்தமை உறுதி செய்யப்பட்டது. . இவ்வாறு உயிரிழந்தவர்களின் சடலங்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டது.

குறித்த விபத்துடன் தொடர்புடைய சாரதியை கைது செய்த சாவகச்சேரிப் பொலிசார் குறித்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]