ஏ .பி.ஜே. அப்துல் மின் 86வது பிறந்த தினம் இன்று யாழில்

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ .பி.ஜே. அப்துல் கலாம் மின் 86வது பிறந்த தினம் இன்று யாழில் கொண்டாடப்பட்டது.

இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ்.பொது நூலக கேட்போர் கூடத்தில் இன்று காலை 9 மணியளவில் நடைபெற்றது.

ஏ .பி.ஜே. அப்துல்

ஏ .பி.ஜே. அப்துல்

ஏ .பி.ஜே. அப்துல்

யாழ்.பொது நூலகத்தில் உள்ள இந்திய பகுதியில் உள்ள அப்துல் கலாமின் உருவச் சிலைக்கு இந்திய துணைத் தூதுவர் ஆ. நடராஜன் மற்றும் அவரது பாரியார் மலர் மாலை அணிவித்தும் அஞ்சலி செலுத்தினார்கள்.

அதனைத் தொடர்ந்து, மத தலைவர்கள், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் உட்பட வடமாகாண சபை அவைத் தலைவர் சீ. வீ.கே.சிவஞானம் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் சமூக ஆர்வலர்கள், இந்திய துணைத் தூதுவர் அலுவலக அதிகாரிகள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து, யாழ்.பொது நூலக கேட்போர் கூடத்தில் பாடசாலை மாணவர்களின் நடன நிகழ்வுகளும், இந்திய சொற்பொழிவாளர் சுகி சிவத்தின் சொற்பொழிவும் நினைவுப் பேருரை இடம் பெற்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]