ஏழை மக்களின் நலன் கருதி 50 ரூபாய்க்கு வைத்தியம் பார்க்கப்படும் கிளிநொச்சியைச் சேர்ந்த வைத்தியர்

கிளிநொச்சி மாவட்டத்தில் வைத்தியத்துறையில் சேவை செய்து கொண்டு சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படுகின்ற நபராக மாறியிருக்கிறார் வைத்தியர் ரஞ்சன்.

பரீட்சையில் சித்தி அடையும் போதெல்லாம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் மாணவர்கள் அனைவரும் வைத்தியத் துறையில் சாதித்து ஏழை மக்களுக்கும் மக்களுக்கும் தான் பிறந்த மண்ணுக்கும் சேவை செய்ய வேண்டும் என தெரிவிக்கிறார்கள்.

அதன் பின்பு அவர்கள் மேல் கல்வி கற்பது என்றுகூறி வெளிநாடுகளுக்கும் வசதியான மாவட்டங்களுக்கும் சென்று பணத்தை சம்பாதிக்க வேண்டுமென குறியாக உள்ள இந்த சூழலில் தான் பிறந்த மண்ணில் கல்வி பயின்று அதே அது மண்ணிலேயே சேவை செய்கின்றார் வைத்தியர் ரஞ்சன்.

அண்மையில் அவரால் திறக்கப்பட்ட வைத்தியசாலையில் நோயாளிகளை பார்வையிடுவதற்காக வரும் நோயாளிகளுக்கு ரூபா 50 ஐ அறவிடுகன்றார்.

ஏழைகளுக்கும் தான் பிறந்த மண்ணுக்கும் சேவை ஆற்றி வருகின்றார் அதனால் இவர் சமூக வலைத்தளங்களில் தற்போது அதிகமாக பேசப்படுகின்ற நபராக இருக்கிறார்.
இவரை எமது இணையத்தளம் வாழ்த்துவதுடன் இவரைப் போன்ற அனைத்து வைத்தியர்களும் சேவை செய்ய முன்வர வேண்டும் என எதிர்பார்த்து நிற்கிறோம்

கிளிநொச்சி கனகபுரத்தில் பிறந்த இவர் கனகபுரம் மகாவித்தியாலயத்தில் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரம் வரை கனகபுரம் மகாவித்தியாலயத்தில் கல்வி பயின்று அதன் பின்னர் கிளிநொச்சி இந்துக் கல்லூரிக்கு உயர்தரம் கற்பதற்காக சென்று அதன் பின்பு உயர்தரம் சித்தியடைந்த யாழ் பல்கலைக்கழகத்தில் மருத்துவத்துறையில் கல்வி பயின்று தற்போது கிளிநொச்சி வைத்தியசாலையில் பணிபுரியும் இவர் தற்போது தனியார் வைத்தியசாலையை கிளிநொச்சியில்நிறுவியிருக்கிறார்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]