ஏழு கிலோ தங்க கட்டிகள் கடற்படையினரால் கைப்பற்றல்

தங்க கட்டிகள்

ஐம்பது மில்லியன் ரூபா பெறுமதியான ஏழு கிலோ தங்க கட்டிகள் யாழ் காங்கேசன்துறை கடற்பரப்பில்வைத்து கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது

வட கடல் ஊடாக தங்கம் இந்தியாவிற்கு கடத்தப்படுவதாக காங்கேசன்துறை கடற்படையினருக்கு கிடைத்த அரகசிய தகவலிற்கமைவாக நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் மேற்படி ஏழு கிலோ பெறுமதியான சுமார் எழுபது தங்க கட்டிகள் கைப்பற்றப்பட்டது

மீன்பிடிப்படகொன்றில் நங்கூரத்திற்கு அருகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த தங்கத்தினை காங்ஙேசன்துறை கடற்படையினர் மீட்டதுடன் குறித்த தங்கத்தை்கடத்த்முற்பட்ட வடமராட்சியை சேர்ந்த இருவரையும் கைது செய்தனர்

குறித்த தங்கம் இன்று யாழ் தெல்லிப்பழையிலுள்ள சுங்கப்பிரிவினரிடம் கையளிக்கப்படுவதுடன் சந்தேக நபர்களையும் நீதிமன்ற நடவடிக்கைக்குட்படுத்துவதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]