முகப்பு News Local News ஏழு கால்களும் இரண்டு உடம்புடன் பிறந்த அதிசய கன்று

ஏழு கால்களும் இரண்டு உடம்புடன் பிறந்த அதிசய கன்று

திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா நடுத்தீவு பகுதியில் ஒரு பசு விசித்திரமான கன்று ஒன்றை பிரசவித்துள்ளது.

கிண்ணியா நடுத்தீவுப் பகுதியில் உள்ள நஜிம் முகமட் சுகைப் என்பவருக்குச் சொந்தமான பசுவே இவ்வாறு விசித்திரமான கன்றைப் பிரசவித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது.

இந்தக் கன்றுக்கு ஏழு கால்களும் இரண்டு உடம்பும் காணப்படுகின்றது.

இதைப்பார்க்கும் போது இரண்டு கன்றுகளுக்கு ஒரு தலை இருப்பதைப் போல் காணப்படுகின்றது.

எனினும், இக்கன்று பிரசவித்து சுமார் ஒரு மணித்தியாலத்திற்குப் பின் இறந்து விட்டது எனத் தெரிவிக்கப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com