ஏற்றுமதி இறக்குமதி அதிகாரியின் விளக்கமறியல் நீடிப்பு

இலஞ்சம் பெற்றபோது கைது செய்யப்பட்ட ஏற்றுமதி இறக்குமதி கட்டுப்பாட்டுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் மஹகமகே காமினி மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவரை எதிர்வரும் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு பன்னிப்பிட்டிய பகுதியில் இரண்டு இலட்சம் ரூபாய் இலஞ்சம் பெற்ற போது, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

10 வருடங்கள் பழமைவாய்ந்த இரண்டு வாகனங்களை ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்வதற்கான பரிந்துரையை வழங்குவதற்கு அவர் இலஞ்சம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]