ஏறாவூர் நகர பிரதேச செயலகம் பிரதேச செயலாளரின்றி இயங்கி வருகின்றது

ஏறாவூர் நகர பிரதேச செயலகம் பிரதேச செயலாளரின்றி இயங்கி வருகின்றது

ஏறாவூர் நகர பிரதேச செயலகம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் நகர பிரதேச செயலகம் கடந்த சுமார் 8 மாதங்களாக பிரதேச செயலாளரின்றி இயங்கி வருகின்றது.

ஏறாவூர் நகருக்கு புதிய பிரதேச செயலாளர் எவரும் நியமிக்கப்படாத நிலையில் உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. றமீஷா தொடர்ந்தும் பதில் பிரதேச செயலாளராக நிருவாகப் பொறுப்புக்களை மேற்கொண்டு வருகின்றார்.

எவ்வாறாயினும் ஏறாவூர் நகர பிரதேச செயலகத்திற்கு பிரதேச செயலாளர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என ஏறாவூரில் உள்ள பொது நல அமைப்புக்கள் வேண்டுகோள் விடுத்து வந்துள்ளன.

ஏறாவூர் நகர பிரதேச செயலாளராகக் கடமையாற்றி வந்த எஸ்.எல். முஹம்மது ஹனீபா அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பிரதேச செயலாளராக இடமாற்றம் பெற்றுச் சென்றதையடுத்து ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளருக்கான வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த சில மாதங்களாக பிரதேச செயலாளர்களின்றி இயங்கி வந்த ஏறாவூர்ப்பற்று, வாகரை, ஓட்டமாவடி, களுவாஞ்சிக்குடி, வெல்லாவெளி ஆகிய பிரதேச செயலகங்களுக்கு சமீப சில நாட்களுக்கு முன்னர் பிரதேச செயலாளர்கள் நியமிக்கப்பட்டு விட்டனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]