ஏறாவூர் நகரசபை தவிசாளருக்கு பிணை

ஏறாவூர் நகரசபை தவிசாளருக்கு பிணை

உள்ளுராட்சி சபைத் தேர்தல் பிரசாரத்தின் போது மாதிரி வாக்குச் சீட்டுக்களை வழங்கினார் என்ற குற்றச்சட்டின் அடிப்படையில் ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றில் ஆஜரான ஏறாவூர் நகரசபை தவிசாளர் ஐ. அல்துல் வாசித் ஓரு இலட்சம் ரூபா சீரீர பிணையில் செல்ல நீதவான் அனுமதி வழங்கியதுடன் எதிர்வரும் ஐப்பசி மாதம் 17 ஆந் திகதி நீதிமன்றில் ஆஜராககுமாறும் உத்தரவிட்டார்.

2018ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்ற தேர்தலின் போது ஏறாவூர் நகரசபைக்கு ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் ஜூப்ரியா வட்டாரத்தில் போட்டியிட்ட ஐ. அல்துல் வாசித 01.02.2017 அன்று பிரசாரத்தின் போது தேர்தல் விதிமுறைகளை மீறி மாதிரி வாக்குச் சீட்டுகளை வழங்கியதாக குற்ச்சாட்டப்பட்டு 201ஆண்டு 1ம் இலக்க உள்ளுராட்சி மன்ற தேர்தல் சட்டத்தில் 262ஆம் அதிகாரத்துக்குட்பட்டு இவர் மீது ஏறாவூரப் பொலிஸாரினால் வழக்கு தொடரப்பட்டது.

குறித்த வழக்கு புதன்கிழமை (12) ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றில் நீதவான் திருமதி கறுப்பையா ஜீவராணி முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது ஓரு இலட்சம் ரூபா சீரீர பிணையில் செல்ல நீதவான் அனுமதி வழங்கியதுடன் எதிர்வரும் ஐப்பசி மாதம் 17 ஆந் திகதி நீதிமன்றில் ஆஜராககுமாறும் உத்தரவிட்டார்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]