ஏறாவூர்- தளவாய் கரையோரப்பிரதேச காட்டுப்பகுதி நீரோடையொன்றில் ஆண் ஒருவரின் சடலம்

ஏறாவூர்- தளவாய் கரையோரப்பிரதேச காட்டுப்பகுதி நீரோடையொன்றில் காணப்பட்ட ஆண் ஒருவரின் சடலம் 04.01.2018 வியாழக்கிழமை மாலை மீட்கப்பட்டுள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.

சுமார் ஐம்பது வயது மதிக்கத்தக்க இச்சடலம் இன்னும் அடையாளங் காணப்படவில்லையென பொலிஸார் கூறினர்.

மனித சஞ்சாரமற்ற பகுதி நீரோடையொன்றில் இச்சடலம் துர்வாடை வீசிய நிலையில் சிதைவடைந்து காணப்பட்டது.

கொலையா அல்லது நீரோடையில் தவறிவிழுந்ததனால் ஏற்பட்ட உயிரிழப்பா? என்பதை ஊகிக்க முடியாதுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

ஏறாவூர்ப் பொலிஸார் இதுதொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

ஏறாவூர்- தளவாய் ஏறாவூர்- தளவாய் ஏறாவூர்- தளவாய்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]