ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி நியமனம்!

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவிலுள்ள ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவுக்கு நிரந்தர சுகாதார வைத்திய அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரியாக எம்.எச்.எம். தாரிக் நியமிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களபபு பிராந்திய சுகாhர சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

இதேவேளை ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரியாகப் பணியாற்றிய வைத்தியர் கலையரசி துரைராசசிங்கம் மட்டக்களப்பு சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்திற்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]