ஏறாவூர்ப் பொலிஸ் பிரிவில் விபத்துச் சம்பவங்களில் மூவர் பலி, இருவர் படுகாயம்

ஏறாவூர்ப் பொலிஸ் பிரிவில் விபத்துச் சம்பவங்களில் மூவர் பலி, இருவர் படுகாயம்

ஏறாவூர்ப் பொலிஸ்

மட்டக்களப்பு- ஏறாவூர் பொலிஸ் பிரிவில் மட்டக்களப்பு – திருகோணமலை பிரதான விதியில் சனிக்கிழமை (23) மாலை மூன்று இடங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்தனர்.

மாவடிவேம்பு , கோரகல்லிமடு மற்றும் ஆறுமுகத்தான்குடியிருப்பு ஆகிய பிரதேசங்களில் இவ்விபத்துக்கள் இடம்பெற்றதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.

ஏறாவூர்ப் பொலிஸ்

மாவடி வேம்பு பிரதேசத்தில் துவிச்சக்கரவண்டியில் சவாரிசெய்த வயோதிபர் ஒருவர் பிரதான வீதியை குறுக்கிட்டபோது அதேதிசையில் வந்த வேன் மோதியதில் 68 வயதுடைய செல்வமணி சிவரெத்தினம் என்பவர் உயிரிழந்துள்ளார். அந்த வேன் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை கோரகல்லிமடு பிரதேசத்தில் தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த பயணிகள் பஸ் வண்டியின் பின்புறத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் 24 வயதுடைய நாகராஜா கோகுலராஜ் என்ற இளைஞர் பலியானார். மற்றுமொருவர் காயமடைந்தார்.

ஏறாவூர்ப் பொலிஸ்

இதற்கிடையே ஏறாவூர் ஆறுமுகத்தான்குடியிருப்பு பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றிய காத்தான்குடியைச் சேர்ந்த 19 வயதுடைய எஸ்ஏ. முனிப் அகமட் என்பவரே மரணமடைந்தவராவார்.

பிரதான வீதியால் இருவர் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் குறுக்கு வீதியிலிருந்து பிரதான வீதிக்குவந்த ஸ்கூட்டி மோட்டார் சைக்கிள் மோதியதையடுத்து பிரதான வீதியால் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரில் ஒருவர் தூக்கிவீசப்பட்டுள்ளார். இவரை மற்றுமொரு வாகனம் இடித்துள்ளது.

ஏறாவூர்ப் பொலிஸ்

இவ்விபத்துடன் சம்பந்தப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் மற்றும் சாரதியுடன் லொறியும் பொலிஸாரினால் மீட்கப்பட்டபோதிலும் மோட்டார் சைக்கிள்களைச் செலுத்தியவர்கள் தலைமறைவாகியுள்ளனர்.

இச்சம்பவங்களில் மரணமடைந்தவர்களது மூன்று சடலங்களும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
ஏறாவூர்ப் பொலிஸார் இச்சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]