ஏறாவூர்ப்பற்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தை ஏறாவூர் நகரசபை மற்றும் ஏறாவூர்ப்பற்று பிரதேச சபை தவிசாளர்கள் புறக்கணிப்பு

ஏறாவூர்ப்பற்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தை ஏறாவூர் நகரசபை மற்றும் ஏறாவூர்ப்பற்று பிரதேச சபை தவிசாளர்கள் புறக்கணிப்பு

மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று பிரதேச ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் ஏறாவூர் நகரசபை மற்றும் ஏறாவூர்ப்பற்று பிரதேச சபைகளுக்கு தெரிவாகியுள்ள தவிசாளர்கள் சமூகமளிக்க வில்லை.

மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று (செங்கலடி) பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் ஆகியோரின் இணைத் தலைமையில் திங்கட்கிழமை (09) பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

நீண்ட இடைவளியின் பின்னர் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் நடைபெற்று கடந்த வியாழக்கிழமை (05) ஏறாவூர் நகரசபைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவுடன் ஐக்கிய தேசிய கட்யைச் சேர்ந்த றம்ழான் அப்துல் வாசித் அலியும் ஏறாவூர்ப்பற்று பிரதேச சபைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவுடன் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியைச் சேர்ந்த நாகமணி கதிரவேல் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

மூன்று இனங்களை உள்ளடக்கிய ஏறாவூர்ப்பற்று பிரதேசத்தின் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் ஆறு மாதங்களின் பின்னர் திங்கட்கிழமை நடைபெற்றது இந்த கூட்டத்தில் ஏறாவூர்ப்பற்று பிரதேச சபைக்குத் தெரிவு செய்யப்பட்டவரட்களின் தவிசாளர் தவிர்ந்த 30 பேரும் ஏறாவூர் நகரசபையிலிருந்து தெரிவு செய்யப்பட்ட மூவரும் சமூகமளித்திருந்தனர்.

ஏறாவூர் நகர சபைக்குபட்ட பகுதியில் ஏறாவூர்ப்பற்று பிரதேசத்துக்குட்பட்ட மூன்று தமிழ் கிராமங்கள் காணப்படுகின்றன. குறித்த கிராங்கள் கடந்த காலங்களில் அபிவிருத்தியில் புறக்கணிக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற்கு ஏறாவூர் நகரசழபத் தவிசாளர் சமூகமளிக்காதமை தொடர்பாக உறுப்பினர்களினால் விசனம் தெரிக்கப்பட்டது.