ஏறாவூரில் வைக்கோல் குவியலில் தீ பரவல்

மட்டக்களப்பு ஏறாவூர் நகர பிரதேசத்தின் பரபரப்பு மிக்க மையப் பகுதியில் தீயினால் ஏற்படவிருந்த பாரிய சேதம் தவிர்க்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த வைக்கோல் குவியலில் தீ பரவியதைத் தொடர்ந்து மட்டக்களப்பு மாநகர சபை மற்றும் ஏறாவூர் நகர சபை தீயணைப்பு பிரிவு என்பனவற்றுடன் பொதுமக்களும் விரைந்து செயற்பட்டதால் ஏறாவூர் நகர பிரதேசத்தில் ஏற்படவிருந்த பாரிய இடர் தவிர்க்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஏறாவூர் முகாந்திரம் வீதியில் திங்கட்கிழமை பகல் 20.08.2018 இச்சம்பவம் இடம்பெற்றபொழுது குறித்த வைக்கோல் குவியலில் பற்றிக் கொண்ட தீ இப்பகுதியில் வீசும் அனல் வெப்ப வேகக் காற்றினூடாக பரவத் தொடங்கியது.

ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸாரும் தீயணைப்பு உதவிகளில் இணைந்து கொண்டனர்.

இந்த வைக்கோல் குவியல் தீயினால் அந்த இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி, சிறிய ரக உழவு இயந்திரம், மற்றும் அவ்விடத்தில் அமைந்திருந்த வீடு என்பவும் தீயினால் சேதமடைந்துள்ளன.

தீ பரவிய பிரதேசத்துக்கான மின்னிணைப்பு உடனடியாகத் துண்டிக்கப்பட்டு தீயணைப்பு பணிகளுக்கு உதவி வழங்கப்பட்டது.

இச்சம்பவம்பற்றி ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

ஏறாவூரில் ஏறாவூரில் ஏறாவூரில்

நகர பிரதேசத்தில் உள்ள கால்நடை வளர்ப்பாளர்கள் தமது கால் நடைகளுக்கு உலர்ந்து போன வைக்கோலை உணவாகக் கொடுத்து கால்நடைகளை வளர்த்து வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.

இதனால் ஏறாவூர் நகர பிரதேசத்தில் பலர் வைக்கோலைச் சேகரித்து வைத்து விற்பனையில் ஈடுபட்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]