ஏறாவூரில் சிறுவனொருவன் சைக்கிளைத் திருடிக் கொண்டு மாயம்

ஏறாவூரில் சிறுவனொருவன் சைக்கிளைத் திருடிக் கொண்டு மாயம்

ஏறாவூரில் பயணத்தில் தனக்கு உதவுமாறு கோரிய நபர் தன்னை சைக்கிளில் இருந்து கீழிறக்கி விட்டு தனது சைக்கிளை அபகரித்துக் கொண்டு மாயமாய் மறைந்து விட்டதாக பாதிக்கப்பட்ட மாணவன் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இச்சம்பவம் சனிக்கிழமை ஏறாவூரில் இடம்பெற்றுள்ளது.

ஏறாவூர் ஆறுமுகத்தான் குடியிருப்பைச் சேர்ந்த மட்டக்களப்பு இந்துக் கல்லூரியில் கல்வி பயிலும் வை. மிதுசியராஜ் (வயது 17) என்ற மாணவனே தனது சைக்கிளைப் பறிகொடுத்தவராகும்.

இச்சம்பவம்பற்றி மேலும், தெரியவருவதாவது,

இவர் சனிக்கிழமை 22.12.2018 நண்பகலளவில் செங்கலடியில் இடம்பெறும் பிரத்தியேக வகுப்புக்குச் சென்று திரும்பி வரும் வழியில் செங்கலடி மத்திய கல்லூரிக்கு முன்பாக நின்ற சுமார் 20 வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞன் மாணவனை இடைமறித்து தன்னையும் சைக்கிளில் ஏற்றிச் செல்லுமாறு கேட்டு மாணிவனின் சைக்கிளின் பின் பக்கம் ஏறி அமர்ந்து கொண்டு சென்றுள்ளார்.

சைக்கிள் ஆறுமுகத்தான்குடியிருப்பை நெருங்கும்போது சைக்கிளை நிறுத்துமாறு திடீரேனக் கூறிய இளைஞன் தான் சாவிக்கொத்து ஒன்றை தவறுதலாக செங்கலடியில் விட்டு விட்டு வந்துள்ளதாகவும் அதனால் சாவிக்கொத்தை உடனடியாகச் சென்று எடுத்து வர சைக்கிளைத் தந்துதவுமாறும் கேட்டுள்ளார்.

மாணவன் சைக்கிளைக் கொடுக்கத் தயங்கிய போது பலவந்தமாக மிரட்டி சைக்கிளை எடுத்துக் கொண்டு மாயமாய் மறைந்த அந்த இளைஞன், மிக நீண்ட நேரம் அம்மாணவன் காத்திருந்தபோதும் திரும்பி வரவே இல்லை. என்று பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவம்பற்றி ஏறாவூர்ப் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]