ஏப்ரல் 16 – 30ஆம் தகிதி வரைபட்டதாரிப் பயிலுனர்களுக்கான நேர்முகத் தேர்வு!!

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பட்டதாரிகளை பட்டதாரிப் பயிலுனர்களாக 20 ஆயிரம் ரூபா கொடுப்பனவில் இணைத்துக் கொள்ளப்படுவதற்கான நேர்முகப்பரீட்சைகள் எதிர்வரும் 16ஆம் திகதி முதல் 30ஆம் தகதி வரையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ளது.

தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சினால் இதற்கான அழைப்புகள் பட்டதாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

பத்திரிகை விளம்பரங்களின் ஊடாக கடந்த 06.08.2017 முதல் 08.09.2017 வரையான ககாலப்பகுதியினுள் விண்ணப்பித்த 31.12.2016 வரை பட்டங்களைப் பெற்றுக்கொண்ட 2598 பட்டதாரிகள் இந் நேர்முகப்பரீட்சைக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.

பட்டதாரிகள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களின் பட்டச் சான்றிதழ்கள், கல்விச் சான்றிதழ்கள், பிறப்புச் சான்றிதழ், ஏனைய சான்றிதழ்கள், தேசிய அடையாள அட்டை, வதிவிடத்தினை உறுதிப்படுத்தும் பிரதேச செயலாளரின் அறிக்கை, வேலையற்ற பட்டதாரி என்பதனை உறுதிப்படுத்தும் சான்றிதழ்களுடன் நேர்முகப்பரீட்சைக்கு சமூகமளிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கியமாக அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களின் மொழித் தேர்ச்சி தொடர்பான சான்றிதழ்கள், கணணி அறிவு தொடர்பான சான்றிதழ்கள், அதே நேரத்தில் இலங்கைக்கு வெளியே அல்லது வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் பெறப்பட்ட பட்டங்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உறுதிப்படுத்தலுடன் இருத்தல் வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

புள்ளிகளின் அடிப்படையிலேயே இந் நேர்முகப்பரீட்சை நடைபெறுகின்றமையினால் பட்டதாரிகள் சான்றிதழ்கள் ஆவணங்களைச் சரியான முறையில் சமர்ப்பிக்க வேண்டியது அவசியமாகும்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]