ஏன் தமிழர்கள் தயக்கம் – பிரதமர் ரணில் விக்ரமசிங்க

ஏன் தமிழர்கள் தயக்கம் பொலிஸ் திணைக்களத்தில் இணைந்துகொள்வதில் தமிழர்கள் ஆர்வம் காட்டுவதில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பொலிஸ் திணைக்களத்தில் காணப்படும் 7000 வெற்றிடங்களில் 10 வீதத்துக்கு தமிழர்களை இணைத்துக்கொள்ள அரசாங்கம் முடிவு செய்துள்ளது. எனினும், இதற்கான நேர்முகத் தேர்வில் 180 பேர் மாத்திரமே கலந்துகொண்டனர்.

பொலிஸ் திணைக்களத்தில் காணப்படும் வெற்றிடங்கள் அனைத்தும் வடக்கில் இருந்தே நிரப்பப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளின் பின்னணியில் இருந்து இதனை ஆராய வேண்டும்.

இது தொடர்பாக வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க, பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஆகியோருடன் கலந்துரையாடியிருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.