தென் மாகாணத்தில் பரவிவரும் வைரஸ் நோய் ஏனைய மாகாணங்களிலும் பரவுவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொற்று நோய்கள் தொடர்பான மருத்துவ நிபுணர் பபா பலிகவடன இது தொடர்பான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
அத்துடன், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில், வைரஸ் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, தெற்கு பகுதியில் இன்புளுவன்சா தொற்று ஏற்படுவதற்காக நோயாளிகளிடம் தென்பட்ட சில அறிகுறிகள், எம்பிலிபிட்டியவிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று, எம்பிலிபிட்டிய மாவட்ட பொது வைத்தியசாலையில் வைத்தியர் தெரிவித்துள்ளார்.
20 தொடக்கம் 30 நோயாளர்களிடம் இந்த அறிகுறி காணப்படுவதாகவும் கடந்த சில வாரங்களாக, இந்த அறிகுறிகள் தென்படும் நோயாளர்கள், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
“இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்று எவரும் கண்டறியப்படவில்லை. நிலைமை கட்டுப்பாட்டுக்குள்ளேயே உள்ளது. எனினும், நோய்க்கான சில அறிகுறிகள், எம்பிலிபிட்டிய பகுதியில் கண்டறியப்பட்டுள்ளது” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எம்பிலிபிட்டியவில் ஏற்பட்ட இந்த நோய் தொற்றால் எந்தவொரு உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் தெற்கு பகுதியில் ஏற்பட்ட இந்த இன்புளுவன்சா, மேலும் பரவக்கூடிய சாத்தியக்கூறுகள் தென்படுவதாகவும் கூறினார்.
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universaltamil
Twitter – www.twitter.com/Universalthamil
Instagram – www.instagram.com/universaltamil
Contact us – [email protected]