ஏதிலிகளின் மீள்க்குடியேற்றம் குறித்து மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் – ஐக்கிய நாடுகள் சபை

இலங்கைக்கு நாடு திரும்பும் ஏதிலிகளின் மீள்க்குடியேற்றம் குறித்து மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின்  ஏதிலிகளுக்கான உயர் ஆணையாளர் ஃப்லிப்போ க்ரென்டி பாராட்டு தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பணியகத்தின் டுவிட்டர் தளத்தில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
ஜெனிவாவுக்கான இலங்கை தூதுவர் ஏ.எல்.ஏ. அஸீஸ், ஐக்கிய நாடுகள் சபையின் ஏதிலிகளுக்கான உயர் ஆணையாளரை நேற்று சந்தித்துள்ளார்.
இதன்போது கொள்கை வகுப்பு விடயத்தில் இலங்கையின் பங்களிப்பை வழங்குவது குறித்தும் ஏதிலிகளுக்கான உயர் ஆணையாளர் கருத்து வெளியிட்டுள்ளதாகவும் ஜெனிவாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பணியகத்தின் டுவிட்டர் தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]