எஸ்.ஏ.சந்திரசேகர் செய்த காரியத்தால் கடும்கோபத்தில் விஜய் ரசிகர்கள்!!

விஜய் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் ரஜினி காலில் விழுந்ததால் விஜய் ரசிகர்கள் கோபத்தில் உள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் போல் கட்சியைத் தொடங்கி அரசியலில் இறங்கவுள்ளார். அதற்கு முன்னோட்டமாக எம்.ஜி.ஆர் சிலையை திறந்து வைத்தார். விழாவில் அவர் பேசியது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் எம்.ஜி.ஆர். சிலை திறப்பு விழா நிகழ்ச்சியில் விஜய் அப்பாவும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகரும் கலந்து கொண்டார், அப்போது ரஜினியின் காலில் விழுந்து ஆசி பெற்றார் எஸ்.ஏ.சந்திரசேகர்.

மேலும் ரசிகர்களிடம் ரஜினியை முதலமைச்சர் ஆக்க வேண்டியது உங்கள் கையில் தான் உள்ளது என அவர் கூறியது அந்த அரங்கில் பெரும் வரவேற்பு பெற்றது. ஆனால், எஸ்.ஏ.சந்திரசேகரின் பேச்சும், நடவடிக்கையும் விஜய் ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது, ஏனெனில் விஜய்யும் வெகுவிரைவில் அரசியலுக்கு வருவார் என பலர் கூற, இவர் இப்படி பேசியது விஜய் ரசிகர்கள் தரப்பில் அதிருப்தி ஏற்படுத்தியுள்ளன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]