எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தார் இலங்கையர் ஜோன் பீரிஸ்

இலங்கையை சேர்ந்த ஜோன் பீரிஸ் என்பவர் நேபாளிய நேரத்தின் பிரகாரம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 5.55 மணியளவில் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து இரண்டாவது இலங்கையர் இவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.தனது இரண்டாவது முயற்சியிலேயே அவர் 8488 மீற்றர் உயரமான எவரெஸ்ட் மலையின் உச்சியை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.