‘எழுமின்’ படத்தின் சென்சார் ரிசல்ட் வெளியானது!

‘எழுமின்’ படத்தின் சென்சார் ரிசல்ட் வெளியானது!

வி.பி.விஜி இயக்கத்தில் விவேக், தேவயானி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘எழுமின்’.

வையம் மீடியாஸ் வழங்கும் இப்படத்தில் விவேக், தேவயானி, பிரவீன், ஸ்ரீஜித், வினித், சுகேஷ், கிருத்திகா, தீபிகா, அழகம் பெருமாள், பிரேம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

தற்காப்பு கலைகளை தங்களது விருப்பமாக தேர்ந்தெடுத்து அதில் சாதிக்க நினைக்கும் ஆறு சிறுவர்களை பற்றிய கதையாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்துக்கு கணேஷ் சந்திரசேகர் இசை அமைத்துள்ளார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கிறார் வி.பி.விஜி.

சமீபத்தில் வெளியான ‘உரு’ படத்தை தயாரித்த இவர், இந்த படத்தில் இயக்குனராக அறிமுகமாகிறார்.

இந்த படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியாகி வரவேற்பு பெற்ற நிலையில், தற்போது இப்படம் சென்சாரில் யு சான்றிதழ் பெற்றுள்ளது.

இதையடுத்து எதிர்வரும் அக்டோபர் 5ஆம் திகதி இப்படத்தை வெளியிடுவதற்கான பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]