எழுதி இயக்குவது ஒரு அரிய கலை…

மக்கள் மற்றும் சினிமா விமர்சகர்களின் கவனத்தை ஈர்த்து அவர்களை மகிழ்விக்க மட்டும் இன்றி சிந்திக்கவும் வைக்கும் படத்தை எழுதி இயக்குவது ஒரு அரிய கலையாகும். இக்கலையில் கைதேர்ந்த  ஒரு சில இயக்குனர்களில் கரு பழனியப்பன் ஒருவர். தனது சமூக மற்றும் அரசியல் கருத்துக்களை வெளிப்படையாக கூறுபவர் அவர் .

அதன் மூலம் சமூக ஊடகங்களில் இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர். இவர் தனது இயக்கத்தில்  அடுத்த படத்தை துவக்கவுள்ளார். பெயரிட படாத  இந்த படம்  சம கால அரசியலை அலசும் படமாகும். தரமான மற்றும் வித்தியாசமான கதைகளை தேடி கண்டுபிடித்து நடிக்கும் நடிகர் அருள்நிதி இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். அவரது வளர்ச்சி இப்படம் மூலம் ஒரு புதிய உயரத்தை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் மாபெரும் வெற்றி பெற்ற  ‘மரகத நாணயம்’ படத்தை தயாரித்த ‘ஆக்ஸிஸ் பிலிம் பேக்டரி’  சார்பில் டில்லி பாபு இப்படத்தை தயாரிக்கவுள்ளார். கதாநாயகி மற்ற நடிக நடிகையர் தேர்வு நடைப் பெற்று கொண்டு இருக்கிறது.ஏற்கனவே அருள் நிதி கதாநாயகனாக நடிக்க   ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’  என்ற தலைப்பில் ஒரு படமும்,  ‘ராட்சஸன்’ என்ற தலைப்பில் விஷ்ணு விஷால் நடிக்கும்  படங்கள் Axess film factory தயாரித்து வருவதுக் குறிப்புடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]