எல்ல காட்டில் அயர்லாந்து நாட்டு பெண்ணுக்கு ஆட்டோ சாரதி செய்த வேலை

அயர்லாந்து நாட்டுப்பெண்ணைக் கடத்தி அவரை பாலியல் வல்லுறவிற்குற்படுத்த முயற்சித்தரை ஆட்டோசாரதியை எல்ல பொலிஸார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

ஆட்டோசாரதியுடன் போராடிதப்பியோடிவந்த அயர்லாந்து நாட்டுப்பெண் கடுங்காயங்களுடன் பண்டாரவளை அரசினர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றார்.

எல்ல காட்டில்

நேற்று இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
சேர்ந்த இப்பெண் தனது கணவருடன் சுற்றுலாவாசிகளாக எல்லப் பகுதிக்குவந்துள்ளனர். இவர்கள் சுற்றுலாவிடுதியொன்றிற்குச் செல்ல அப்பகுதி ஆட்டோவொன்றில் பயணித்தனர்.

அவ்வேளையில் ஆட்டோசாரதி தந்திரமாக அயர்லாந்துநாட்டுப் பெண்ணை கடத்திச் செல்லும் நோக்குடன் ஆட்டோவை நிறுத்திவிட்டு, இயந்திரக் கோளாரு ஏற்பட்டதாக சாரதி கூறினார். பெண்ணின் கணவனை ஆட்டோவை தள்ளுமாறு ஆட்டோசாரதி கோரியதும், அக்கோரிக்கையை ஏற்று அந்நபர் ஆட்டோவைத் தள்ளினார். அச்சந்தரப்பத்தில் ஆட்டோ இயங்கியதும் ஆட்டோசாரதி அயர்லாந்து நாட்டுப்பெண்ணை கடத்திச் சென்றார்.

சனநடமாட்டம் இல்லாத இடமொன்றில் ஆட்டோவை நிறுத்திய அப்பெண்ணுடன் பாலியல் வல்லுறவில் ஈடுபட முயற்சித்துள்ளார். அதையடுத்து அப்பெண் ஆட்டோசாரதியுடன் கடுமையாகப் போராடி தப்பியோடியுள்ளார். அருகேயிருந்த வீடொன்றிற்குச் சென்ற அப்பெண் விடயத்தைக் கூறி அவர்களின் உதவியுடன் பண்டாரவளை அரசினர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இச்சம்பவம் குறித்து எல்லப் பொலிஸாருக்கு செய்யப்பட்ட புகாரையடுத்து பொலிஸார் குறிப்பிட்ட ஆட்டோ சாரதியைக் கைதுசெய்ய தீவிர தேடுதல்களை மேற்கொண்டுள்ளனர்.
தேடப்பட்டுவரும் ஆட்டோசாரதி இனம் காணப்பட்டிருப்பதாகவும் விரைவில் அந்நபரைக் கைதுசெய்ய முடியுமென்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]