எல்லை நிர்ணய அறிக்கை தொடர்பில் பாராளுமன்றத்தில் ஒத்திவைப்பு பிரேரணை

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் தேவைக்கு அமைவாகவே உள்ளுராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணய அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதென அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.

இந்த எல்லை நிர்ணய அறிக்கை குளிரூட்டிய அறைகளில் அப்போது வரையப்பட்டதால் சமகால அரசாங்கம் மக்கள் கருத்துக்களுக்கு செவிமடுக்க நேர்ந்ததென்றும் அமைச்சர் கூறுகிறார்.
பாராளுமன்ற ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் அவர் உரையாற்றினார்.

இந்தப் பிரேரணையை பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்., உள்ளுராட்சி தேர்தலை பின்போட்டதன் மூலம் நாட்டின் அரசியல் கலாசாரத்திற்கு பெரும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

முன்னைய அறிக்கையின் தவறுகளை திருத்துவது அரசாங்கத்தின் நோக்கம். அரசு ஜனநாயகத்தை முடக்க மாட்டாதென அமைச்சர் கூறினார். 2020ம் ஆண்டில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கம் ஸ்தாபிக்கப்படும் என்றும் அமைச்சர் பைசர் முஸ்தபா கூறினார்.