எல்லை நிர்ணயம் தொடர்பான அறிக்கையின் கைநகர்வு

உள்ளூராட்சி சபைகளின் எல்லை நிர்ணயம் தொடர்பான அறிக்கை கட்சித்தலைவர்களிடம் கையளிக்கப்படவுள்ளது. உள்ளுராட்சி மன்றங்களின் எல்லைகள் தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட குழுவினால் இறுதியறிக்கை தயாரிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த அறிக்கையில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுவதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இன்றைய தினம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்களிடம் குறித்த அறிக்கை கையளிக்கப்படவுள்ளது.

மாகாணங்களின் எல்லை , தேர்தல் முறை மாற்றம் , விகிதாசார முறைக்கு பதிலாக தொகுதிவாரி முறையில் தேர்தலை நடத்துவது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்ட போதும், மாகாண எல்லை நிர்ணய விடயங்களிலும் பிரச்சினைகள் காணப்படுகின்றன.
இந்நிலையில் எதிர்வரும் உள்ளு}ராட்சி மன்ற தேர்தல் விகிதாசார முறையிலேயே நடத்தப்படலாமெனவும், அதற்கான கூடுதல் சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.