எலி காய்ச்சல் பரவும் அபாயம்

எலி காய்ச்சல்

சீரற்ற காலநிலையை அடுத்து எலி காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார பரிசோதகர்களின் சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய தெரிவித்துள்ளார்.

இதனால், வெள்ள நீர் தேங்கி நிற்ககும் பகுதிகளில் நடமாடும் போது பாதணிகளை அணிந்துக் கொள்ள வேண்டும் என்று பொதுமக்களை அவர் அறிவுறுத்தியுள்ளார்.

அத்துடன், பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலிருந்து வெள்ள நீர் வழிந்தோடிய பின்னர், அப்பகுதிகளை நன்றாகத் சுத்தம் செய்த பின் வீடுகளுக்குச் செல்லுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், சுகாதாரப் பரிசோதகர்களின் உதவியுடன், வீடுகளை சுத்தப்படுத்திக் கொள்வதற்காக, 011-2635675 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு அறிவிக்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நீர்த் தாங்கிகளை சுத்தம் செய்யுமாறும் கொதித்து ஆறிய நீரை மாத்திரம் அருந்துமாறும் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உணவு பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]