எருமை கன்றை விழுங்கிய மலைப்பாம்பு

மலைப்பாம்பு ஒன்று எருமை கன்று ஒன்றை விழுங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கஹந்தமோதர, தில்லவடவன பிரதேசத்தில் எருமை கன்றை விழுங்கி மிகவும் சிரமத்தில் இருந்த குறித்த மலைப்பாம்பை கண்ட பிரதேசவாசிகள், வனவிலங்கு அலுவலகத்திற்கு அறிவித்துள்ளனர்.

இதையடுத்து அங்கு வந்த அதிகாரிகள் பாம்பை பிடித்து புந்தல தேசிய பூங்காவில் விடுவித்துள்ளனர்.

குறித்த மலைப்பாம்பு ஏனைய கால்நடைகளை விழுங்கக்கூடும் என பிரதேசவாசிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]