எரிபொருள் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை- அர்ஜுன ரணதுங்க தெரிவிப்பு!!

எரிபொருள் விலை தற்போது அதிகரிக்கப்படமாட்டாது என பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது எரிபொருள் விலை அதிகரிப்பது தொடர்பில் அமைச்சர்கள் சிலர் வினவிய போதே அமைச்சர் அர்ஜுன ரணதுங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நஷ்டத்தில் இயங்கினாலும் தற்பொழுது விலையை அதிகரித்து மக்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தும் எண்ணம் இல்லை என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எரிபொருள் விலை தொடர்பில் விலைச் சூத்திரம் ஒன்று முன்வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தாலும் நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் அமைச்சரவைக்கு அவ்வாறான விலைச் சூத்திரமொன்றும் முன்வைக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]