எரிபொருள் விநியோகம் இன்றுமாலை முதல் வழமைக்குத் திரும்பும்

எரிபொருள் விநியோகம் இன்றுமுதல் வழமை நிலைமைக்கு திரும்பும் என்று அரசு தெரிவித்தது.

இன்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ராஜித சேனாரட்ன மேலும் தெரிவித்ததாவது,

எரிபொருள் விநியோகம்

வேலைநிறுத்தம் தொடர்பாக அரசு பொது மக்களின் நலனைக்கருத்திற்கொண்டு மேற்கொண்டுள்ள அத்தியாவசிய சேவைகள் தொடர்பான சட்டத்தை, வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டோர் படித்துப்பார்த்து செயற்படவேண்டும்.

வேலைப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் தொடர்பில், அரசு அத்தியாவசிய சேவையாக எரிபொருள் விநியோககத்தை அறிவித்துள்ளது.

எரிபொருள் விநியோகம்

பொதுமக்களின் அத்தியாவசிய சேவையொன்றை அரசு பிரகடனப்படுத்டுத்தும் போது கடமைக்கு திரும்பாதபட்சத்தில் அவ்வாறான ஊழியர் ஒருவர் கடமையிலிருந்து விலகிச்சென்றதாக கருதப்படுவார்.

இராணுவம் மற்றும் பொலிஸாரின் உதவியுடன் எரிபொருள் விநியோகம் இன்று மாலை முதல் வழமைக்குத் திரும்பும் என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]