எம்.ஜி.ஆர் ஆக மாறும் சிவகார்திகேயன்! புதிய படத்தின் பெயர் என்ன தெரியுமா?

நடிகர் சிவகார்திகேயன் சின்னதிரையில் அறிமுகமாகி பின்னர் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். தற்போது கனா படத்தை தயாரித்து தயாரிப்பாளராகவும் அறிமுகமாகியுள்ளார்.

இவர் அடுத்ததாக சின்னத்திரை பிரபலம் ரியோ ராஜ் நடிக்கும் படத்தை தயாரிக்கிறார். இதில் ஷிரின், ராதாராவி, நாஞ்சில் சம்பத் மற்றும் ஆர்.ஜே. விக்னேஷ்காந்த் உட்பட பலர் நடிக்கின்றனர். படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து டப்பிங் வேலைகள் நடைப்பெறுகிறது.

இப்படத்திற்கு படக்குழு எம்.ஜி.ஆரின் ஹிட் பாடலான நெஞ்சமுண்டு நேர்மையுண்டு என்ற தலைப்பை தேர்வு செய்துள்ளார்களாம். இது பற்றி விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிப்பார்கள் என கூறப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]