முகப்பு Cinema எம்.ஜி.ஆரின் மனைவியாக நடிக்கவுள்ள ரித்விகா

எம்.ஜி.ஆரின் மனைவியாக நடிக்கவுள்ள ரித்விகா

எம்.ஜி.ஆரின் மனைவியாக நடிக்கவுள்ள ரித்விகா

பெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கை வரலாற்றினை ‘காமராஜ்’ என்ற பெயரில் திரைப்படமாக தயாரித்து வெளியிட்ட ரமணா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தற்போது மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாற்றினை ‘எம்.ஜி.ஆர்’ என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரித்து வருகிறது.

எம்.ஜி.ஆரின் பால்யகால வேடத்தில் நடிக்க ஒரு சிறுவனுக்கான தேர்வு நடைபெற்ற நிலையில், அத்வைத் என்ற சிறுவன் தேர்வு செய்யப்பட்டுள்ளான்

எம்.ஜி.ஆரைப் போன்றே முகத்தோற்றம் கொண்ட பிரபல விளம்பரப்பட நாயகன் சதீஷ்குமார் எம்.ஜி.ஆர் பாத்திரத்தில் நடிக்கிறார்.

எம்.ஆர்.ராதாவாக பாலாசிங், டைரக்டர் பந்துளுவாக Y.G.மகேந்திரன், எம்.ஜி.ஆரின் அண்ணன் சக்கரபாணியாக மலையாள நடிகர் ரகு, பாய்ஸ் நாடக கம்பெனி உரிமையாளராக தீனதயாளன், உயிர் தொண்டனாக வையாபுரி ஆகியோர் நடிக்கிறனர்.

மறைந்த முன்னால் முதல்வர்கள், கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் பாத்திரங்களில் நடிக்க பொருத்தமான நடிகர், நடிகையர் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

விரைவில் துவங்க இருக்கும் அடுத்தக்கட்ட படப்பிடிப்பில் எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாவாக நடிகை ரித்விகா நடிக்க இருக்கிறார்.

ஏ.எம்.எட்வின் சகாய் ஒளிப்பதிவு செய்ய, செம்பூர் ஜெயராஜ் திரைக்கதை, வசனம் எழுத்தில் எஸ்.பி.அகமது படத்தொகுப்பு செய்கிறார்.

மேலும் ரமணா கம்யூனிகேஷன்ஸ் சார்பாக அ.பாலகிருஷ்ணன் இத்திரைப்படத்தை தயாரித்து, இயக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com