அழகாக பொய் பேசக் கூடியவர் ஹக்கீம்

எம்.எஸ்.எஸ்.அமீர் அலி

அழகாக பொய் பேசக் கூடியவர், அழகாக படங்காட்டக் கூடியவர் என்ற படியால் ரவூப் ஹக்கீம் பேசி ஏசிக் கொண்டிருக்கின்றார். என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவி;த்தார்.

ஓட்டமாவடி பிரதேச சபைக்கு ஐக்கிய தேசிய முன்னனியில்; போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து வேட்பாளர் எல்.ரி.புர்க்கான் தலைமையில் மீராவோடையில் நேற்று இரவு இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

ஏறாவூரில் மரச்சின்னத்தில் வெற்றி பெற்று வந்த மௌலானாவுக்கு மரத்தில் கேட்பதற்கு வரம் கிடைக்கவில்லை தராசில் கேட்கின்றார். அவரை எதிர்த்து அதே கட்சியில் இருந்து முதலமைச்சராக வந்த நசீர் அஹமட் ஐக்கிய தேசிய முன்னனியில் போட்டியிடுகின்றார்.

கடந்த காலத்தில் நிகழ்காலத்தில் உள்ளுராட்சி சபை, மாகாண சபை, பாராளுமன்ற தேர்தல் மூலம் இந்த பிரதேசத்திற்கு என்ன செய்யப் போகின்றோம் என்பதைத் தான் நாங்கள் பேசுகின்றோம். எங்களது மனைவி, பிள்ளைகள், உறவினர்களுக்கு வசைபாடுகின்ற மேடையாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியுள்ளது என்ற கவலை உங்களுக்கும் இருக்கின்றது, அதே கட்சியின் ஆரம்பத்தில் இருந்தவன் என்ற அடிப்படையில் எங்களுக்கும் இருக்கின்றது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிலவரம் பெட்டிக்கடை வியாபாரம் போட்டு நிலைமை காணப்படுகின்றது. ஏறாவூரில் தராசுக்கும் யானைக்கும் பேச வேண்டும். காத்தான்குடியில் தராசுக்கு பேச வேண்டும். வாழைச்சேனையில் மரத்துக்கு பேச வேண்டும். வாய் தவறாமல் பேசுகின்றார். அழகாக பொய் பேசக் கூடியவர், அழகாக படங்காட்டக் கூடியவர் என்ற படியால் பேசி ஏசிக் கொண்டிருக்கின்றார்.

நல்ல அரசியல், பேச்சு, பண்பாடுகள், விழுமியங்கள் இந்த சமூகத்துக்கும், இளைஞர்களுக்கும் எல்லோருக்கும் கற்றுக் கொடுக்க வேண்டிய பொறுப்பு அரசியல் தலைவர்களுக்கு இருக்கின்றது. தேர்தல் காலம் வந்து விட்டது என்பதற்காக விழாக்காலம் எடுக்கின்றார்கள் என்ற காரணத்தினால் எங்களது அடிப்படையில் இருந்து மாற்றம் பெற முடியாது.

அரசியல் அதிகாரம் உயரலாம், பணியலாம், இல்லாமல் போகலாம் ஆனால் நாங்கள் நாங்களாகவே இருந்து கொள்ள வேண்டும். அரசினால் கிடைக்கும் பணத்தினை கல்விக் கூடங்களுக்காக அதிகமாக செலவு செய்திருக்கின்றோம் என்றார்.