எம்மிடம் மக்கள் பலம் உள்ளது – பஷில் ராஜபக்ஷ

பஷில் ராஜபக்ஷ

 

 

 

 

 

 

 

இந்த அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தைக் கொண்டு காணப்பட்டாலும், நாம் மக்கள் நீதிமன்றத்தில் அது பொய் என்பதை நிரூபிப்போம் என முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

மஹிந்த குழுவினர் இந்த அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலம் இல்லையென கூறிவருகின்றனர். இருப்பினும், அண்மையில் கொண்டுவந்த திருத்தச் சட்ட மூலம் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்துடன் வெற்றி பெற்றது எப்படி என அவரிடம் ஊடகவியலாளர் ஒருவர் வினவியபோதே பஷில் ராஜபக்ஷ இவ்வாறு கூறினார்.

எம்மிடம் மக்கள் பலம் உள்ளது. நாம் யாழ்ப்பாணத்துக்கும் செல்லவுள்ளோம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.