எம்சிசியின் அடுத்த தலைவராக சங்கக்கார- மிகப்பெரிய கௌரவம்

இங்கிலாந்து மேரிலெபோன் கிரிக்கெட் கழகத்தின் ( MARYLEBONE CRICKET CLUB) தலைவராக இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் குமார் சங்கக்கார நியமிக்கப்பட்டுள்ளார். அவரது பதவிக்காலம் வரும் ஒக்டோபர் முதலாம் திகதி ஆரம்பமாகி ஒரு வருடத்துக்கு நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டன் குடியுரிமை இல்லாத ஒருவரை அந்தக் கழகத்தின் தலைவராக நியமிப்பது இதுவே முதன்முறையாகும். அந்தப் பொருமை குமார் சங்கக்காரவுக்குக் கிடைத்துள்ளது.

மேரிலெபோன் கிரிக்கெட் கழகத்தின் வருடாந்தப் பொதுக் கூட்டம் இன்று மே முதலாம் திகதி லோட்ஸில் நடைபெற்றது. இதன்போது தற்போதைய தலைவர் அந்தோனி ரைபோர்ட், கழகத்தின் அடுத்த தலைவராக குமார் சங்கக்காரவை அறிவித்தார்.

மேரிலெபோன் கிரிக்கெட் கழகத்தில் (MCC) குமார் சங்கக்கார, 2011ஆம் ஆண்டு பெறுமதியான உரையை ஆற்றியிருந்தார். அதனால் அந்தக் கழகத்தால் அவருக்கு 2012ஆம் ஆண்டு மரியாதைக்குரிய வாழ்நாள் உறுப்பினர் என்ற கௌரவமளிக்கப்பட்டது. அதே ஆண்டில் அந்தக் கழகத்தின் உலக கிரிக்கெட் குழுவின் உறுப்பினராக இணைந்து கொண்ட குமார் சங்கக்கார, தொழிப்படும் உறுப்பினராக சேவையாற்றினார்.

“இது ஒரு பெரிய கௌரவம். மேரிலெபோன் கிரிக்கெட் கழகத்தின் அடுத்த தலைவராக வேண்டும் என நான் மிகவும் எதிர்பார்த்திருந்த பாத்திரம். எம்சிசி உலக அளவில் முதற்தர கிரிக்கெட் கழகமாகும்” என்று குமார் சங்கக்கார பெருமையாகக் கூறினார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]