எமில் ரஞ்சனின் விளக்கமறியல் நீடிப்பு

போதைப் பொருள் ஒழிப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகர் நியோமல் ரங்கஜீவ மற்றும் முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் ஆகியோரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் இன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தனர்.

இதன்போதே அவர்களை எதிர்வரும் 03ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2012ஆம் ஆண்டு வெலிக்கட சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரம் தொடர்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]