‘எமன்’ திரைப்படம் மூலம் அரசியலில் கால் பதிக்கிறார் விஜய் ஆண்டனி

எதிர்மறையான தலைப்புகளை கொண்டு, கலை களத்தில் வெற்றிகளை குவித்து வரும் நடிகர் – இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, தற்போது விரைவில் வெளியாக இருக்கும் ‘எமன்’ திரைப்படம் மூலம் தன்னுடைய இமாலய வெற்றி பயணத்தை தொடர இருக்கிறார். வர்த்தக உலகினரின் நம்பிக்கைக்குரிய நாயகனாக திகழ்ந்து கொண்டிருக்கும் விஜய் ஆண்டனி, இந்த ‘எமன்’ திரைப்படம் மூலம் முதல் முறையாக அரசியல்வாதி அவதாரம் எடுத்து இருக்கிறார். விஜய் ஆண்டனி – மியா ஜார்ஜ் நடிப்பில், ‘நான்’ படப்புகழ் ஜீவா சங்கர் இயக்கி இருக்கும் ‘எமன்’ படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி, ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. வெளியான கொஞ்சம் நாட்களிலேயே ‘பேஸ்புக் டிரெண்டிங்’ வரிசையில் முன்னிலை வகித்தது மட்டுமின்றி, ‘யூடூபில்’ ஏறக்குறைய ஆறு லட்சம் பார்வையாளர்களை பெற்று, யுடியூப் டிரெண்டிங் வரிசையில் மூன்றாம் இடத்தையும் பெற்று இருக்கின்றது இந்த ‘எமன்’ டீசர்.

yeman
‘லைக்கா புரொடக்ஷன்ஸ்’ மற்றும் ‘விஜய் ஆண்டனி பிலிம் கார்பொரேஷன்’ இணைந்து தயாரித்து இருக்கும் ‘எமன்’ திரைப்படம், ஒளிப்பதிவாளர் ஜீவா சங்கர், இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, படத்தொகுப்பாளர் வீர செந்தில்ராஜ், கலை இயக்குநர் செல்வக்குமார், ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன், நடன இயக்குநர் ஷெரிப், பாடலாசிரியர்கள் அண்ணாமலை, பா வெற்றி செல்வன், கோ சேஷா மற்றும் ஏக்நாத்ராஜ் என பல முன்னணி தொழில் நுட்ப கலைஞர்களை உள்ளடக்கி இருப்பது மேலும் சிறப்பு. பிரபல நடிகர் தியாகராஜன் முக்கிய கதாபாத்திரத்திலும், கிரண், அருள் டி சங்கர், சார்லி மற்றும் மாரிமுத்து ஆகியோர் ஏனைய கதாபாத்திரங்களிலும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
“பொதுவாகவே இதுவரை வந்த அரசியல் படங்கள் யாவும், அரசியலை மக்களின் பார்வையில் இருந்து காட்ட கூடியதாக தான் இருந்திருக்கிறது. ஆனால் ‘எமன்’ திரைப்படம் அரசியலை அரசியல்வாதிகளின் பார்வையில் இருந்தே பிரதிபலிக்கும். ‘எமன்’ படத்தில் முதல் முறையாக, நம் நாட்டு ஆண் மகன்களின் வீர அடையாளமாக கருதப்படும் முறுக்கு மீசையை வைத்துக்கொண்டு நடித்து இருக்கிறார் விஜய் ஆண்டனி. சமீபத்தில் வெளியான எங்களின் ‘எமன்’ பட டீசர், ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருவது, எங்கள் அனைவருக்கும் அளவுகடந்த மகிழ்ச்சியாக இருக்கின்றது. நிச்சயமாக எங்களின் எமன், சிறந்ததொரு பிரம்மாண்ட பொழுது போக்கு திரைப்படமாக இருக்கும். யூடூபிலும், ஏனைய சமூக வலைத்தளங்களிலும் எங்களின் ‘எமன்’ பட டீசர் முன்னிலை வகித்து வருவது, நான்கு முனைகளில் இருந்தும் விஜய் ஆண்டனிக்கு பெருகி வரும் புகழை உணர்த்துகிறது” என்று உற்சாகமாக கூறுகிறார் ‘எமன்’ படத்தின் இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான ஜீவா சங்கர்.