எப்போது அரசியல் வருவீர்கள் என்று விஜயிடம் கேட்டதற்கு என்ன சொன்னார் தெரியுமா??

சினிமா-அரசியல் இரண்டுமே இப்போது மிகவும் ஒன்றாகி வருகிறது. வருங்காலத்தில் இது எந்த அளவிற்கு மாறும் என்பது தெரியவில்லை.

ஏற்கெனவே ரஜினி-கமல் அரசியலுக்கு வந்துவிட்டனர், அவர்களின் வேலைகளையும் பார்த்து பார்த்து செய்து வருகின்றனர். அதேசமயம் விஜய் எப்போது அரசியலுக்கு வருவார் என்று எதிர்ப்பார்க்கும் ரசிகர்கள் பலர்.

விஜய் சமீபத்தில் ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்தது அனைவருக்கும் தெரிந்த விஷயம். அதில் ஒரு கேரள பெண் ரசிகை விஜய்யை பற்றி கூறியிருந்தது மிகவும் வைரலானது, அந்த பெண் சமீபத்தில் ஒரு பேட்டியளித்தார்.

அப்போது, ரசிகர் ஒருவர் விஜய் அவர்களிடம் எப்போது அரசியல் வருவீர்கள் என்று கேட்டார். அதற்கு அவர், ஏன் நான் நடித்தது போதுமா என்று ஒரே வசனத்தில் முடித்தார். அவர் அரசியல் வர வேண்டாம், நடிக்கட்டும் என்று பேசியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]