எபோலா வைரஸ் நோய் 23 பேர் பலி

கொங்கோ நாட்டில், எபோலா வைரஸ் நோய் தொற்றுக்கு உள்ளான 23 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன், சுமார் 44 பேர் எபோலா நோய் தொற்றுக்கு உள்ளாகியிருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக இந்த வைரஸ் நோய் கொங்கோ நாட்டில் பரவிவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சுமார் 4 ஆயிரம் பேருக்கு செலுத்துவதற்காக எபோலா வைரஸ் தடுப்பு மருந்து கொங்கோ நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார நிறுவனம் சோதனை ரீதியில் குறித்த தடுப்பு மருந்தை அங்கு அனுப்பி வைத்துள்ளது.

விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவக்கூடிய எபோலா வைரஸ் நோய், உயிராபத்தை ஏற்படுத்தக்கூடியதாகும்.

எபோலா நோயானது கடந்த 2013ஆம் ஆண்டு, ஆபிரிக்க நாடுகளில் முதலில் பரவியது.

அதனையடுத்து, 2016ஆம் ஆண்டு வரை இந்த நோய் காரணமாக 11 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]