என் மீது தாக்குதல் நடத்த திட்டம்: கோட்டாபய ராஜபக்ஷ

என் மீது தாக்குதல் நடத்த திட்டம்: கோட்டாபய ராஜபக்ஷ

தன் மீது தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அத்தோடு பாதாள உலக குழுத் தலைவர் மாகந்துரே மதுஷின் உதவியுடன் தன்னைக் கொலை செய்வதற்கு சதித் திட்டம் தீட்டப்படடுள்ளதாக நம்பகமான தகவல் கிடைத்துள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் மேலும் கூறுகையில், ‘எனது பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. எனவே மீண்டும் பாதுகாப்பு அணியை மீளப்பெறுவது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் பேச்சுவார்த்தை நடத்தினேன்.

எனினும் ஒன்றரை மாதங்களாகியும் இதுவரை அவரிடமிருந்து எவ்வித பதிலும் கிடைக்கவில்லை.

நீதிமன்றத்தில் முன்னிலையாகும் போது என் மீது தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும் பாதாள குழுத் தலைவரின் இந்த முயற்சியை முறியடித்து எனது செற்பாடுகளை மேற்கொண்டேன்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் என்னையும் கொலை செய்யும் சதித் திட்டம் பற்றிய செய்திகள் வெளியானதும் முன்னாள் மற்றும் பணியில் இருக்கும் இராணுவ அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், பலர் தொலைபேசியில் அழைத்து மேலதிக பாதுகாப்பு முனனேறபாடுகளைச் செய்யுமாறும் உள்ளூர் பயணங்களை குறைத்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டனர்’ எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தமக்கு முழுமையான பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் பொலிஸ்மா அதிபருக்கு கோத்தபாய ராஜபக்ஷ கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]