என் மனைவி நித்யாவுக்கு 2 கள்ளக் காதலர்கள்- பாலாஜியின் பரபரப்பு புகார்

என்னுடைய மனைவி நித்யா விற்கும் பைசல் என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருப்பதாகவும் இது தொடர்பான புகாரை விசாரித்த காவல் உதவி ஆய்வாளர் ஒருவரும் தனது மனைவியை அவரது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டதாகவும் தாடி பாலாஜி பரபரப்பு புகார் அளித்துள்ளார். பைசல் என்பவருடன் எனது மனைவிக்கு கள்ளக் காதல் இருப்பதை அறிந்த பிறகு தான் பிரச்சனை ஏற்பட்டது. இது எனக்கு தெரிய வந்ததும் என் மனைவியும் நானும் பிரிந்து வாழ்ந்து வருகிறோம்.

என் மனைவியின் கள்ளக்காதல் குறித்து எனது நண்பரான காவல் உதவி ஆய்வாளர் மனோஜ்குமார் என்பவருக்கு தெரிவித்தேன். இந்த வழக்கில் எனக்கு உதவுவதற்கு வந்த அவர் என்னுடைய மனைவியை தனது கட்டுப்பாட்டில் கொண்டு சென்றார். எனது மனைவியும் காவல் உதவி ஆய்வாளர் மனோஜ்குமாரும் தற்போது நெருங்கி பழகி வருகின்றனர். மேலும் எனது மனைவியிடம் இருந்து சில முக்கிய ஆவணங்களை பெற்றுக் கொண்டு என் மனைவி நித்யாவை தற்போது மனோஜ்குமார் மிரட்டுவதாக எனக்கு தெரியவந்துள்ளது.

மேலும் என் மனைவி விஷயத்தில் நான் தலையிடக் கூடாது என்று என்னையும் என் குடும்பத்திற்கும் தொடர்ந்து மனோஜ் மிரட்டல் விடுத்து வருகிறார். என் மனைவியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் காவல் உதவி ஆய்வாளர் மனோஜால் பாதிக்கப்பட்டு நான் மிகுந்த வேதனைக்கு உள்ளாகியிருக்கிறேன். எனவே என் மனைவியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் காவல் உதவி ஆய்வாளர் மனோஜ் குமார் மீதும் என்னிடமிருந்து என் மனைவியை பிரித்த பைசூல் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நடிகர் தாடி பாலாஜி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து தனது மனைவிக்கு இரண்டு கள்ளக்காதலர்கள் இருப்பதாக வெளிப்படையாக அளித்துள்ள பேட்டி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]