என் மனைவிக்கு டெலிவரி.. நான் 2 மாசம் லீவு… கலக்கும் மார்க்

கலிபோர்னியா: பேஸ்புக் நிறுவனத்தின் உரிமையாளர் மார்க் ஜூகர்பெர்க் இரண்டாவது குழந்தையின் வரவுக்காக காத்திருக்கிறார். அக்குழந்தை பிறந்தவுடன் அவர் தந்தையருக்காக எடுக்கும் பேறு கால விடுப்பை 2 மாதங்களுக்கு எடுத்து மனைவியையும், குழந்தையையும் பார்த்து கொள்வார். பேஸ்புக் உரிமையாளர் மார்க் ஜூகர்பெர்க்கிற்கு பிரிசில்லா என்ற மனைவியும், மேக்ஸ் என்ற ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் பிரிசில்லா இரண்டாவது முறையாக கர்ப்பம் தரித்தார். அவருக்கு இரண்டாவது குழந்தை இன்னும் 2 அல்லது 3 மாதங்களில் பிறக்கக் கூடும் என்று தெரிகிறது. இந்நிலையில் ஜூகர்பெர்க் தனது பேஸ்புக்கில் ஒரு பதிவிட்டுள்ளார்.

புது வரவுடன்… வேலைக்கு செல்வோர் நிச்சயம் தங்களுக்கு பிறந்த புதிய குழந்தையுடன் இருக்க வேண்டும். அதுதான் ஒட்டுமொத்த குடும்பத்துக்கும் நல்லது. நான் விடுப்பு முடித்து திரும்பி வரும்போது எனது நிறுவனம் அப்படியே ஸ்திரமான நிலையில் இருக்கும் என்று நம்புகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.